உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரீல்ஸ் செய்து பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு

ரீல்ஸ் செய்து பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு சோலார், பாலுசாமி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் முகிலன், 22. பி.பி.ஏ. படித்து உள்ளார். சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட்டில், சில மாதங்களுக்கு முன் தனது யமஹா பைக்கில் அதிவேகமாக ஓட்டி சென்று ரீல்ஸ் செய்தும், சில தினங்களுக்கு முன்பு தாலுகா, டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன், ரீல்ஸ் செய்து வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அனுமதியின்றி பைக்கை தன் விருப்பபடி மாற்றியது, அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாகவும் வாகன போக்குவரத்துக்கான சாலையில், பைக்கை ஓட்டியதை போலீசார் உறுதி செய்தனர். மொடக்குறிச்சி போலீசார், முகிலன் மீது அஜாக்கிரதையாக ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் ரீல்ஸ் செய்வது, சுற்றுச்சூழலுக்கு புகை எழுப்பி கேடு விளைவிப்பது, சாலை விதிகள் பின்பற்றாதது, பொது இடங்களில் குந்தகம் விளைவிப்பது, அதிக ஒலி எழுப்புவது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்த பின் ஜாமினில் விடுவித்தனர். அவருக்கு எச்சரிக்கை விடுத்து, அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ