கரும்பு தோட்டத்தில் பெண் சிறுத்தை குட்டி
சத்தியமங்கலம், தாளவாடி வனச்சரகம் பாரதிபுரம் கிராமத்தில், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., சுப்பிரமணிக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. தொழிலாளர்கள் நேற்று கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுத்தை குட்டி உறுமி கொண்டிருந்தது. இதுகுறித்து சுப்பிரமணியத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர் தெரிவித்த தகவலின்படி வனத்துறையினர் விரைந்தனர். பிறந்து, 15 நாட்களேயான பெண் குட்டி என்பது தெரிய வந்தது. சிறுத்தை குட்டியிடம் யாரும் அருகில் செல்லாதவாறு பாதுகாத்தனர். தாய் சிறுத்தையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தனர்.