ஈரோடு : சத்தியமங்கலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சத்தியமங்கலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டில் பி.காம், பி.பி.ஏ., - பி.ஏ., பொருளியல், பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.எஸ்சி., இயற்பியல், பி.எஸ்சி., வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.சி.ஏ., ஆகிய, 10 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பாடப்பிரிவில் மொத்தம், 570 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, அரசு இட ஒதுக்கீடு விதிமுறைப்படி நடைபெற உள்ளது.மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், என்.சி.சி., மாணவர்கள், பாதுகாப்பு படைகளின் தகுதியான பணியாளர்களின் குழந்தைகள் உட்பட சிறப்பு பிரிவினர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று கல்லுாரியில் நடக்கிறது. பொது கலந்தாய்வு வரும் ஜூன், 10 முதல், 13 வரை நடக்க உள்ளது.இக்கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவில், சேர்க்கை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தரவரிசை அடிப்படையில் கல்லுாரி மூலம் மின்னஞ்சல், அலைபேசி மூலம் கலந்தாய்வு நடக்கும் நாட்கள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியல், சேர்க்கை கட்டணம் தொடர்பான விபரங்களை, கல்லுாரியின் www.gascsathy.ac.inஎன்ற இணைய தளத்தில் அறியலாம். கலந்தாய்வுக்கு வரும்போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், 3 நகல்களை எடுத்து வர வேண்டும். இக்கல்லுாரியில் புதிதாக சேர்க்கை பெற்ற அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், ஜூலை, 3 முதல் வகுப்புகள் துவங்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.