ஈரோடு: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், ப.செ.பார்க்கில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் மேயர் மல்லிகா, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி செயலர் ரத்தன் பிரித்வி, ஜெ.பேரவை மாவட்ட இணை செயலர் வீரக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக மாநகர் மாவட்ட அலுவலகத்திலும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நகர செயலர் மூர்த்தி, பஞ்.,தலைவர்கள் ஜெயமணி கணேசன், நல்லுார் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* அத்தாணி, தோப்பூர், முனியப்பன் பாளையம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதிகளில், கோபி எம்.எல்.ஏ.,செங்கோட்டையன் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மோகன் குமார், அந்தியூர் நகரச் செயலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.* பவானியில் அ.தி.மு.க., சார்பில், நகர செயலர் சீனிவாசன் தலைமையில் பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் பங்கேற்று, 27 வார்டுகளில் கட்சி கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், கராத்தே பெரியசாமி, மாவட்ட இளைஞரணி செயலர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* கோபியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலர் பிரினியோ கணேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலர் முத்துரமணன், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.