மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மர் பழுதால் 12 மணி நேரம் 'பவர்-கட்'
17-Feb-2025
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது. சில இடங்களில் குறைந்த மின்னழுத்தத்தால், மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ரங்கம்பாளையம் ஜோசப் மருத்துவமனை பின்புறம் தாழ்வழுத்த மின்பாதையில் இன்சுலேட்டரில் பழுது ஏற்பட்டது. இதனால் மின்சாரத்தில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. இரவிலேயே மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் முகாமிட்டு சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் காலை, 6:30 மணிக்கு பிரச்னை சரி செய்யப்பட்டு, சீரான மின்சாரம் வினியோகம் கிடைத்தது. இவ்வாறு கூறினர். கோடை வெயில் துவங்கும் முன்பே, இரவில் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அச்சம் கண்டுள்ளனர்.
17-Feb-2025