அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சுற்றுப்பயண விபரம், பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள், வாக்காளர்கள் பட்டியலை, பூத் வாரியாக சரி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்ன சாமி, மாவட்ட துணை செயலர்கள் ஆலம் தங்க ராஜ், மல்லிகா, பொருளாளர் கண்ணதாசன், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் பங்கேற்றனர்.