உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா

ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா

ஈரோடு: ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில், 16வது ஆண்டு விழா 'டெக்பிரீஸ்- 2024' என்ற தலைப்பில் நடந்தது.நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார். சென்னை ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் நிறுவன மனிதவள தலைவர் வீரலெட்சுமி நெல்லைநாயகம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அதிகாரி வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல்வர் நந்தகோபால் ஆண்டறிக்கை வாசித்தார். பருவத்தேர்வுகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, -மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்களுக்கு, சிறப்பு அழைப்பாளர் வீரலெட்சுமி நெல்லைநாயகம் பரிசு வழங்கி பேசுகையில்,'' தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களது துறையில் திறம்பட கற்றுக்கொண்டு புதிய படைப்புகளை படைக்க வேண்டும். மாணவர்கள் தங்களது இளமை காலத்தினை பொற்காலமாக எண்ணி, சமூக ஊடகங்களில் நேரத்தை விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.சின்னத்திரை புகழ் டி.ஜே.பிளாக் பங்கேற்று, இசை, பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை