உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

ஈரோடு: அவல்பூந்துறை சார்பதிவாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்-குப்பதிவு செய்துள்ளனர்.அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளராக முத்துக்குமார் உள்ளார். தீபா-வளி பண்டிகையை முன்னிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர், அவல்பூந்துறை ஆபீசில் கடந்த, 23ம் தேதி சோத-னையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத, 2.56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதை-யடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சார்பதிவாளர் முத்துக்குமார் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் பத்திர எழுத்தர்கள் கவுரிசங்கர், தமிழ்ச்செல்வன் மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சந்திரசேகர், கார்த்தி-கேயன் என நான்கு பேர் மீதும், ஊழல் தடுப்பு சட்-டத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை