உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

பவானி : பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டையில், உலக மாதவிடாய் சுகாதார தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள், உடல் நல பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, இளைய தலைமுறையினரின் சீரழிவு, புகையிலை தடுப்பு சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மாதவிடாய் காலத்தில் வளர் இளம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பராமரிப்பு முறைகள், அரசின் மாதவிடாய் சுகாதார திட்டத்தில் இலவச நாப்கின்கள் கிடைக்கும் இடங்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சுகாதார சவால்கள் ஆகியன பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஈரோடு மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மாவட்ட மனநலத்திட்ட சமூக சேவகர் கவிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ