சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர் நியமனம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகள், மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு நடந்த கணக்கெடுப்பில், 964 பேர் இருப்பது கண்டறியப்பட்டது.இவர்களில், 280 பேருக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் பிரச்னை குறித்து பேச, 15 நபர் கொண்ட நகர விற்பனைக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான தேர்தல் கடந்த, 30ல் நடந்தது. இதில் மனுத்தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி, சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.