உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

ஈரோடு,: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரி-சன விழா கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் சப்ப-ரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து தொடங்கி ஈஸ்வரன்-கோவில் வீதி, மணிக்கூண்டு, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, காமராஜர் வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்து திரு-வீதி உலா கண்டார். அப்போது பக்தர்கள் அரிசியை சுவாமிக்கு வழங்கினர். அந்த அரிசியை வைத்து திருவாதிரை களி தயார் செய்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் வாருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு வைதீக முறைப்படி திருக்கல்-யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை நடராஜருக்கு நெய் அபிஷேகம் செய்து, ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து வெள்ளி சப்ப-ரத்தில் சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் திருவீதி உலா சென்றார். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி