மகன் இழப்பால் வேதனை; ஆட்டோ டிரைவர் மாயம்
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, சானார்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 60, ஆட்டோ டிரைவர். ஆறு ஆண்டுக்கு முன் இவர் மகன் விஜய் இறந்து விட்டார். அப்போது முதல் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். வீட்டில் இருந்து அடிக்கடி ஐந்தாறு மாதங்கள் காணாமல் போய் விடுவார். பின்னர் வீடு திரும்பி, கோவிலுக்கு சென்றதாக மனைவி சக்தியிடம் தெரிவிப்பது வழக்கம். இதேபோல் மீண்டும் மாயமாகி விட்டார். மனைவி சக்தி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.* அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகள் பிரியங்கா, 20; கல்லுாரி மாணவி. வீட்டில் இருந்த பிரியங்கா நேற்று முன்தினம் திடீரென மாயமாகி விட்டார். தந்தை பழனிச்சாமி புகாரின்படி, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.