உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தியேட்டரில் தீயால் பகீர்

தியேட்டரில் தீயால் பகீர்

ஈரோடு: ஈரோடு, பெரிய வலசில் உள்ள ஒரு தியேட்டரில் இரண்டு ஸ்கிரீன் உள்ளன. ஒன்றில் தங்கலான், மற்றொன்றில் ஆங்கில படம் திரையிடப்பட்டு இருந்தது. நேற்று முன் தினம் இரவு, இரண்டாவது காட்சி ஓடியது. இதில், 300க்கும் மேற்பட்ட மக்கள் இரு ஸ்கிரீன்களிலும் சினிமா பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தங்கலான் ஸ்கிரீன் பகுதி கேண்டீனில் இருந்த பாப்கார்ன் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகளவிலான கரும்புகை வெளியேறி திரையரங்கிற்குள்ளும் சூழ்ந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். படம் பாதியில் நிறுத்தப்பட்டது. தியேட்டரில் இருந்த தீயணைப்பான்களை கொண்டு தியேட்டர் ஊழியர்களே, 20 நிமிடங்களில் தீயை முழுமையாக அணைத்தனர். அரை மணி நேரத்துக்கு பின் மீண்டும் தங்கலான் படம் திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை