மேலும் செய்திகள்
முதலீடு செய்த பணத்தை தராத பங்குதாரர் மீது வழக்கு
22-Jun-2025
வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல்
17-Jun-2025
பவானி, :அம்மாபேட்டை அருகே குறிச்சியை சேர்ந்தவர் மாரிமுத்து, 64; கூலி தொழிலாளி. செம்படாம்பாளையம் தர்கா வழியாக வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி ரமேஷ், 46, மாரிமுத்துவை தடுத்துள்ளார். தான் கடனாக தந்த, 60 ஆயிரம் ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். நீண்ட நாளாக பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த ரமேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த ரமேஷ் ஓடி விட்டார். அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாரிமுத்து அளித்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் ரமேஷை தேடி வருகின்றனர்.
22-Jun-2025
17-Jun-2025