மேலும் செய்திகள்
தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்
02-Nov-2024
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டும் தண்ணீரில் குளிக்க, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு தடுப்பணை வழியாக, 420 கன அடி தண்ணீர் வெளியேறியது. அதேசமயம் நேற்று முன்தினம் இரவு, கொடிவேரியில், 15 மி.மீ., சத்தியில், 22 மி.மீ., நம்பியூரில், 19 மி.மீ., மழை பெய்ததால், தடுப்பணை வழியாக நேற்று காலை, 866 கன அடி மழைநீர் வரத்தானது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப-டவே, தடுப்பணைக்குள் நுழைய, அருவியில் குளிக்க, பரிசல் பயணம் செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தடுப்பணை வளாகம் வெறிச்சோடியது.28 ஆயிரம் பேர் வருகைதீபாவளி பண்டிகை விடுமுறையால், கடந்த, 31ல், 3,282 சுற்-றுலா பயணிள் வந்தனர். அதற்கு மறுநாளும் விடுமுறை என்-பதால், 1ம் தேதி, 13 ஆயிரம் பேர்; நேற்று முன்தினம், 12,342 பேர் வந்த னர். மொத்தத்தில் தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால், மூன்று நாட்களில், 28 ஆயிரத்து 624 பேர் தடுப்-பணைக்கு வந்து சென்றனர்.
02-Nov-2024