உள்ளூர் செய்திகள்

பாம்பால் பகீர்

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி அணைகட்டுரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டு படுக்கை அறையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வினோத சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது, 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள், 20 நிமிடம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.* ஈரோடு பழைய பாளையம் இந்து நகரை சேர்ந்தவர் பிரதீப். இவரது வீட்டுகூரையில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 4 அடி நீள சாரை பாம்பு இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள், 15 நிமிடம் போராடி பாம்பை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை