உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ௧௦௦ அடியை நெருங்கும்பவானிசாகர் நீர்மட்டம்

௧௦௦ அடியை நெருங்கும்பவானிசாகர் நீர்மட்டம்

புன்செய்புளியம்பட்டி, டிச. 14-நீர்ப்பிடிப்பு பகுதியில், கன மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம், 100 அடியை (அணை நீர்மட்டம் ௧௦௫ அடி) விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 99.30 அடியை எட்டியது. நீர் இருப்பு, 28.1 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. நீர்வரத்து, 2,196 கன அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ச்சியாக நீர் வந்து கொண்டிருப்பதால், 100 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, 200 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ