உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்டோ மீது மோதிய பைக்; வாலிபர் பலி

ஆட்டோ மீது மோதிய பைக்; வாலிபர் பலி

கோபி: பவானி அருகே மைலம்பாடியை சேர்ந்தவர் முத்துக்குமார், 55, விவசாயி. மனைவி வளர்மதியுடன், 49, சரக்கு ஆட்டோவில் கவுந்தப்பாடி அருகே பூலப்பாளையம் என்ற இடத்தில் நேற்று காலை சென்றார். பவானியை சேர்ந்த சுரேஷ், 32, ஓட்டி வந்த யமாகா பைக், சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் சுரேசும், அவர் பின்னால் அமர்ந்திருந்த மோகன், 30, பலத்த காயமடைந்தனர். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுரேஷ் இறந்தார். வளர்மதி புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை