உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

பவானி:பவானி அருகே, பள்ளி வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.பவானி அருகே, புன்னம் அங்கமுத்து கொட்டாயை சேர்ந்த ராமதேவன் மகன் பிரகாஷ், 29, கூலி தொழிலாளி. இவர் நேற்று பவானி -ஆப்பக்கூடல் ரோட்டில், ஜம்பை அருகே ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வேகமாக வந்த தனியார் பள்ளி மினி பஸ், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பிரகாஷ் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை