மேலும் செய்திகள்
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
20-Dec-2024
நம்பியூர், டிச. 22--- -நம்பியூர் அருகேயுள்ள எலத்துார் குளத்துக்கு வரும் பறவைகள் குறித்து ஆய்வு, கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. இதில், 135 வகையான பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. சிசு, நறுவிலி, வாகை, சீமை கருவேலம், ஆய மரங்களில் சிறிய நீர்க்காகம், பெரிய நீர்க்காகம், பாம்புதாரா உள்ளிட்ட பறவைகள் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்து வருவதும் தெரிந்தது. இதில்லாமல் மத்திய ஆசியா நாட்டு பறவைகள் வழித்தடத்தில், பறவைகள் வலசை வருதலும் நடக்கிறது. இதில் பல வகையான மண் கொத்தி, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, வெண்புருவ வாத்து போன்ற வலசை வாத்துக்கள், பல வகையான கதிர் குருவிகள், வாலாட்டிகள், கீச்சான்கள், இரைக்கொல்லி பறவைகள் அடங்கும். வட இந்தியா மற்றும் இமயமலை பகுதியில் இருந்து நீலவால், பஞ்சுருட்டான்கள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. இத்துடன் சாம்பல் வயிற்றுக்குயில், மாங்குயில், ஈப்பிடிப்பான்கள் போன்ற பறவைகளும் வந்துள்ளன. இரவில், ௭,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு தங்குகின்றன. பல்லுயிர் நிறைந்து வாழும் முக்கியத்துவம் பெற்ற எலத்துார் குளத்தை அரசு முறையாக பாதுகாக்க, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாதாந்திர அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
20-Dec-2024