உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை விபத்தில் மூளைச்சாவு மாணவன் உடலுறுப்பு தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு மாணவன் உடலுறுப்பு தானம்

பெருந்துறை, சென்னிமலை, திருமுகமலர்ந்தபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்-ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த், 17; பிளஸ் ௨ முடித்தவர். கடந்த, 3ம் தேதி உறவினர்களுடன் காரில் செல்லும்போது, காங்கேயம்--சென்னிமலை ரோட்டில் குப்பைமேடு அருகே சாலை விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது. அவரது பெற்றோர் சம்மதப்படி இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள், உறுப்பு தானமாக பெறப்பட்டன. கொடையாளியின் உடலை, கல்லுாரி முதல்வர் ரவிக்குமார், மருத்துவமனை ஊழியர்கள் மரியாதை செய்து ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ