உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருநங்கையருக்கு அழைப்பு

திருநங்கையருக்கு அழைப்பு

ஈரோடு, திருநங்கைகள் உயர்கல்வி பயில, கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர் கல்வி பயிலும் போது, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயனடையலாம். இதற்காக திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்டவை, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தமிழ் வழி கல்வி படித்திருக்க வேண்டும் என்பதில் தளர்வு செய்யப்படும். திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், திருநங்கை நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக கொண்டு பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !