கால மின் புகார் மின்வாரியம் அழைப்பு
ஈரோடு, டிச. 4-தற்போது வடகிழக்கு பருவமழை காலமாகவும், புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை நேரத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ உடனடியாக மின்வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இதற்காக மின்வாரியத்தின் வாட்ஸ் ஆப் எண்: 94458-51912ல் தகவல் தெரிவிக்கலாம். புகார்களை, மின்னகம் எண்: 94987-94987ல் தெரிவிக்கலாம். இத்தகவலை ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.