உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆம்புலன்ஸ் மீது மோதிய கார்

ஆம்புலன்ஸ் மீது மோதிய கார்

தாராபுரம், நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது, கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.தாராபுரத்தை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 35; பைக்கில் நேற்று காலை சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடுமலை ரவுண்டானா அருகே சென்றபோது, பல்லடத்தில் இருந்து பிரதீப், 31, ஓட்டி வந்த ஹுண்டாய் கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பூபதி, காரை ஒட்டிய பிரதீப் காயமின்றி தப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை