உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3 லட்சம் லஞ்சம் இருவர் மீது வழக்குப்பதிவு

ரூ.3 லட்சம் லஞ்சம் இருவர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்-துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது அலுவலக செயற்பொறியாளர் சேகர், களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணி இருந்தனர். அவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் சிக்கியது. விசாரணையில் ஒப்பந்ததாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இவர்க-ளிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர் யார்? இதில் வேறு அதிகா-ரிகளுக்கு தொடர்புள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !