கால்நடை விவசாயிகள் போலீசில் புகார் மனு
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்-களில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகள் போன்ற கால்நடைகளை, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் தங்களின் பசிக்காக கடித்து கொல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நாய்கள் கால்நடைகளை கொல்வதில்லை; விவசாயிகள் தங்களின் சுயநலத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து விவசாயிகள், 200க்கும் மேற்பட்டோர் நேற்று காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில், விவசாயிகள் மீது அவதுாறு பரப்பி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுப-வர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.