உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயிரை பறித்த செல்போன் மோகம் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு

உயிரை பறித்த செல்போன் மோகம் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு

கோபி, :கோபி அருகே சலவைக்கல்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபிரியா, 38; பால் சொசைட்டி ஊழியர். மூன்றாண்டுகளுக்கு முன் கணவர் செங்கோட்டையன் இறந்து விட்டார். மகள் சபர்ணா, 17; கோபி அருகே பெருமாள் கோவில்புதுாரில் பெற்றோர் வீட்டில், மகளுடன் வசிக்கிறார். கொளப்பலுாரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சபர்ணா, செல்போனை அதிகம் பார்த்து கொண்டு, சரியாக படிக்காமல், தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதனால் சத்தியபிரியா மகளை திட்டியும், அறிவுரை கூறியும் வந்தார். கடந்த, 21ம் தேதி இரவு செல்போனில் கேம் விளையாடி கொண்டு, படிக்காமல், வீட்டு வேலை செய்யாத சபர்ணாவை கண்டித்ததுடன், செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்த நிலையில் வீட்டருகே மாட்டு தொழுவத்தில் சபர்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.சத்தியபிரியா கேட்டபோது, செல்போனை பறித்ததால் களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, நேற்று முன்தினம் இரவு இறந்தார். சத்தியபிரியா புகாரின்படி சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்