மேலும் செய்திகள்
இடைநின்ற மாணவர் 8 பேர் மீண்டும் சேர்க்கை
30-Oct-2025
ஈரோடு,:டி.என்.பாளையம் யூனியன் கொங்கர்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட மலை கிராமமான விளாங்கோம்பை குடியிருப்பு பகுதியை சேர்ந்த, 36 மாணவர்கள், 8 கி.மீ., துாரத்தில் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், பள்ளி கல்வித்துறை வாகனம் வழங்கி பள்ளி சென்றனர். பருவமழையால் கிராமச்சாலை, காட்டாற்று தரைப்பாலம் அரிக்கப்பட்டு கடந்த அக்.,9ம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக ஆய்வு செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:நாளிதழ் செய்தி எதிரொலியாக, கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அம்மாணவர்கள் பள்ளி செல்ல ஏதுவாக தார்ச்சாலை, உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர சத்தி வனக்கோட்ட துணை இயக்குனர், உதவி இயக்குனர் (பஞ்.,) ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தரைப்பாலங்களை சீரமைப்பது உடனடி சாத்தியமில்லை. காட்டாறுகளை கடக்காமல், 4 கி.மீ., துாரமுள்ள மக்கள் பயன்படுத்தி வரும் மாற்றுப்பாதையான நடைபாதையை சீரமைத்து, வாகனங்கள் செல்லும்படி மாற்றித்தர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
30-Oct-2025