மேலும் செய்திகள்
கல்லறை திருவிழா துாய்மை பணி
30-Oct-2025
ஈரோடு:நவ., 2ம் தேதியை கிறிஸ்தவர்கள், கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். இந்த தினமான நேற்று, இறந்து போன முன்னோர், பெற்றோர் சமாதிகளை சுத்தம் செய்து, மாலைகளால் அலங்கரித்து வழிபட்டனர். இதன்படி ஈரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில், திரளான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து, பன்னீர், ஜவ்வாது தெளித்து, மெழுகுவர்த்தி, சாம்பிராணி, ஊதுபத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தைகள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின் அனைத்து கல்லறைகளிலும் புனிதநீர் தெளித்தனர். இதேபோல் மாவட்டத்திலும் கல்லறை திருநாளை, கிறிஸ்தவர்கள் அனுசரித்தனர்.
30-Oct-2025