உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ஜவுளி சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை விர்ர்

ஈரோடு ஜவுளி சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை விர்ர்

ஈரோடு: ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நா-டகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநிலங்-களில் இருந்தும் மக்கள், வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டி-கைக்கு இன்னும், 15 நாட்களும், ஆங்கில புத்-தாண்டு, பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், மொத்த விற்பனை அதிகமாக நடந்தது. ஜவுளி சந்தையில் வீட்டுக்கு தேவையான துண்டு, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், லுங்கி, வேட்டி, நைட்டி, உள்ளாடை போன்றவற்றை சில்லறை விற்பனையாக வாங்கி சென்றனர். கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் அதிகமான விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ