உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் டல்

நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் டல்

கோபி, கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தையில் பருப்பு சந்தை கூடியது. அதிகாலையே விற்பனை களை கட்டும். ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், பருப்பு மற்றும் பயிர் ரகங்களை, மொத்த கொள்முதல் செய்வதில், பண பரிவர்த்தனைக்கு வழியின்றி அவதியுறுவதாக, பருப்பு வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பருப்பு வியாபாரி பிரகாஷ் கூறியதாவது:பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கு பின், தொகையை வங்கியில் செலுத்துவோம். தேர்தல் நடத்தை விதியால், பணத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நடத்தை விதியால், 25 சதவீத விற்பனை பாதித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நேற்றைய சந்தையில் துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சை பயிறு மற்றும் பாசிப்பருப்பு, தலா 130 ரூபாய்; கடலை பருப்பு மற்றும் கடுகு, தலா 100 ரூபாய்; சீரகம், 500, பொட்டுக்கடலை, 100, மல்லி, 140, வரமிளகாய், 200, புளி, 100, பூண்டு, 150, கருப்பு சுண்டல், 100 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை