இறைவனின் குந்தைகளுடன் கலெக்டரின் காபி வித் நிகழ்வு
ஈரோடு: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். பெற்றோர் அல்லது இருவரில் ஒருவரை இழந்து நிதியுதவி பெறும் குழந்தைகளுடன் கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, எழுத்தாளர் சரிதா ஜோ ஆகியோர் உரையாடினர். குழந்தைகளின் தினசரி வாழ்வியல், தேவை, குறைகளை கேட்டறிந்தனர். குழந்தைகளும் தங்களின் அன்றாட நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டனர்.