உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை மாத்திரை மேலும் 2 பேர் கைது

போதை மாத்திரை மேலும் 2 பேர் கைது

ஈரோடு:ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த, 5 மதியம், 12:30 மணிக்கு, வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்கு பயன்படுத்துவதற்காக, விற்பனை செய்ய வைத்திருந்த ஈரோடு பெரிய சேமூர் நவீன்,25, ஈரோடு மாணிக்கம்பாளையம் சுதர்சன்,25, மற்றும் ஈரோடு கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த ஹரிநிவாஸ்,20, ஆகிய மூவரை வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 75 வலி நிவாரணி மாத்திரை, 5 ஊசிகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய, நாமக்கல் மாவட்டம், வெப்படை, மேட்டுக்கடை அம்மா நகரை சேர்ந்த முருகேசன்,36, ஈரோடு, பெரிய சேமூர், பெனங்காரர் தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன்,29, ஆகிய இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை