மேலும் செய்திகள்
சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்
15-Oct-2025
பவானி, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பணிமனைக்கு உட்பட்ட அரசு டவுன் பஸ் கே-2, கவுந்தப்பாடியில் இருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு புறப்பட்டது. பணியில் கண்டக்டர் செல்வன், 52, இருந்தார். ஆப்பக்கூடல் அருகே நல்லா மூப்பனுார் பிரிவு நிறுத்தத்தில் நின்று பஸ் புறப்பட்ட நிலையில், மயங்கி கண்டக்டர் விழுந்தார். அந்தியூர் அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதித்த மருத்துவர் நெஞ்சுவலியால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மாரடைப்பால் இறந்த செல்வன், கவுந்தப்பாடியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Oct-2025