உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மார்ச்சில் சி.இ.டி.பி., அமைக்கும் பணி

மார்ச்சில் சி.இ.டி.பி., அமைக்கும் பணி

ஈரோடு: ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் துவக்கி வைத்தல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதற்கான விழா நேற்று நடந்தது.இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, 12,284 பயனாளிகளுக்கு, 171 கோடி ரூபாயில் நலத்திட்டம் உட்பட, 307 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார்.விழாவில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஈரோடு மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இவ்விழா நடக்கும் இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட், 60 கோடி ரூபாயில் அமைகிறது.பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீர் வெளியேறியதால், மாசுபாடு ஏற்பட்டது. இதையறிந்து, 40 கோடி ரூபாயில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (சி.இ.டி.பி.,) அமைக்க முதல்வர் உத்தரவிட்டு, அமைச்சர் உதயநிதி நேரில் வந்து அறிவிப்பு செய்தார். அதற்கான அடிப்படை பணி நடந்து வரும் நிலையில் வரும் மார்ச் மாதம் முறையாக பணி துவங்கும். ஈரோடு சி.என்.கல்லுாரி வளாகத்தில், விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி, மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதும் பணிகள் துவங்கும். இவ்வாறு பேசினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நன்றி கூறினார்.விழாவில் மேயர் நாகரத்தினம், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு இளங்கோவன், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி