நீர்நிலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்ற தாமதம் கொடுமுடியில் தொடரும் நீதிமன்ற அவமதிப்பு
நீர்நிலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்ற தாமதம்கொடுமுடியில் தொடரும் நீதிமன்ற அவமதிப்புகொடுமுடி, நவ. 24-இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. இதனால் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பங்குனி உத்திர திருவிழாவின்போது, பழனி மலைக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்வது தொன்று தொட்டு வரும் ஐதீகம். இந்நிலையில் கொடுமுடியில் காவிரி ஆறு மற்றும் புகளூரான் வாய்க்கால் கரையை பலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி பரிகார தொழில் செய்கின்றனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கொடுமுடி பேரூராட்சி பராமரிப்பில் உள்ள கொடுமுடி நகர்பகுதி சாலைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி கொண்ட அமர்வு ஈரோடு கலெக்டர், நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு, 90 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற, கடந்த ஜன., ௨ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, கொடுமுடி மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூரட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.