உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, நேற்று காலை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், ஆணையர் அலுவலகம் எதிரே தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளனர்.இந்த அறையை ஆய்வு செய்த, கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மணீஷ், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்வது குறித்து கேட்ட-றிந்தார்.பின், அங்குள்ள அலுவலர்கள் கூறியதாவது: கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்படும். சுழற்சி முறையில், துணை தாசில்தார் நிலை அலுவலர் தலைமையில் அலுவலர்கள் பணி செய்வர். தற்போது, 94890 93223 என்ற கட்டுப்பாட்டு அறை எண் செயல்படுகிறது. வேறு சில எண்களும் வழங்க உள்-ளனர். இந்த எண்ணிலும், 'சி-விஜில்' ஆப் மூலமும் வாக்கா-ளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார் குறித்து, உடனடியாக தொடர்புடைய பகு-திக்கான பறக்கும் படையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்-படும்.தவிர, பறக்கும் படையினர் பறிமுதல் செய்யும் பணம், பரிசு பொருட்கள் போன்றவை இங்கு கொண்டு வரப்பட்டு, பாது-காப்பாக வைக்கப்படும். தற்போது, 2 பெரிய 'டிவி' வைக்கப்-பட்டு, இவ்வளாகம், பறக்கும் படையினரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இங்கு பதிவு செய்யப்படும் புகார், எடுக்-கப்பட்ட நடவடிக்கை, வாக்காளர் தொடர்பான புகார்களின் தொடர் நடவடிக்கைகளை, அறிக்கையாக தேர்தல் நடத்தும் அலு-வலரிடம் சமர்பிக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை