உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஷ மாத்திரை சாப்பிட்டு தம்பதியர் தற்கொலை

விஷ மாத்திரை சாப்பிட்டு தம்பதியர் தற்கொலை

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர்,36; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாலாமணி, 29. இவர்களுக்கு வந்தனா, 10, மோனிஷ், 7, என இரு குழந்தைகள் உள்ளனர். தனசேகர், பாலாமணி, குழந்தைகள் உட்பட நால்வரும், நேற்று காலை, 11:30 மணிக்கு விஷ மாத்திரை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளனர். பின் அவர்கள் மீட்கப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனசேகர், பாலாமணி ஆகியோர் நேற்று இரவு இறந்தனர். குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக, தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். சிறுவலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை