உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகனம் மோதி பைக்கில் பயணித்த தம்பதி படுகாயம்

வாகனம் மோதி பைக்கில் பயணித்த தம்பதி படுகாயம்

கோபி :கோபி அருகே ஏளூரை சேர்ந்தவர் ஜெயராமன், 28. இவர் கடந்த 25ம் தேதி, தனது மனைவி வினோதினியுடன், 22, டி.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் பைக்கில், சத்தி சாலையில் மாக்கினாங்கோம்பை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், ஜெயராமன் ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காயமடைந்த தம்பதி இருவரும் சிகிச்சைக்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜெயராமன் நேற்று கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை