கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே வெள்ளக்கரட்டூர் சேடக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கொமாரசாமி, 49; விவசாயி. நேற்று இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று, தோட்டத்து கிணற்று அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென, 60 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட உரிமையாளர் கொமாரசாமி, அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.