மேலும் செய்திகள்
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
21-Sep-2025
அந்தியூர், கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து தஞ்சாவூருக்கு, ௩௫ டன் அஸ்கா சர்க்கரை ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரி, பர்கூர் மலையில் தாமரைக்கரை அடுத்த முதல் கொண்டை ஊசி வளைவு அருகில் நேற்று முன்தினம் இரவு, ௭:௧௫ மணிக்கு தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது.இதில், ௩௫ டன் சர்க்கரையுடன் லாரியும் நாசமானது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் லாரியிலிருந்த சர்க்கரை தீயில் உருகி 'பாகாக மாறி சாலையில் ஓடியது. இதனால் தீயணைப்பு பணி முடிந்தும், வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி., உதவியுடன் சர்க்கரை 'பாகை' அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நள்ளிரவு, ௧:௩௦ மணிக்கு வாகனங்கள் செல்ல தொடங்கின. தீயில் நாசமான சர்க்கரையின் மதிப்பு, ௧௫ லட்சம் ரூபாய், லாரியின் மதிப்பு, ௪௦ லட்சம் ரூபாய் இருக்கும். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Sep-2025