உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த வாணிப்புத்துார் அருகே பள்-ளத்துார் அண்ணன்மார் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரி-யண்ணன், 48, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி சாந்தி, 42; இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஓராண்டுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கினார். சில மாதங்க-ளாக தவணை கட்டாததால், பைனான்ஸ் தரப்பில் காரை கொண்டு வந்து விடும்படி கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்-தவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்-காக கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பெரியண்ணன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை