உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரி, தொழில் வரி விலக்களிக்க வலியுறுத்தல்

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரி, தொழில் வரி விலக்களிக்க வலியுறுத்தல்

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரி, தொழில் வரி விலக்களிக்க வலியுறுத்தல்ஈரோடு, டிச. 1-ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரி, தொழில் வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தியுள்ளனர்.அவர்களது கடிதத்தில் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, 5.4 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இச்சூழலில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் இயங்கும் விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரி, தொழில் வரி பெரும் சுமையாக உள்ளது. அதை அவ்வப்போது உயர்த்துவதால், மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சொத்து வரி, தொழில் வரியில் இருந்து விசைத்தறி கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 'டேரிப் 3ஏ2'ல் மானிய மின்சார இணைப்பு கொண்ட விசைத்தறி கூடங்களுக்கு விலக்களிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ