மேலும் செய்திகள்
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
05-Feb-2025
சத்தியமங்கலம்: சத்தியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் நேற்று இடித்து அகற்றப்பட்டது.சத்தியமங்கலத்தில் கோபி சாலை திம்மையன்புதுாரில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், நுாற்றாண்டுக்கும் மேலான முத்து மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் இருந்தது. அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். கோவிலை ஒட்டியுள்ள சிலர், நெடுஞ்சாலைத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கோவில்கள் இருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.நெடுஞ்சாலைத்துறைக்கு சாதக மாக கிடைத்த தீர்ப்பால், நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் சவுந்தர்ராஜன், சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான அதிகாரிகள், தொழிலாளர்கள் நேற்று வந்தனர். கோவிலை இடித்து அகற்றினர். முன்னதாக கோவிலிலிருந்த சிலைகள் முறையாக பூஜை செய்து அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கையாக போலீசாரும் குவிக்கப்பட்டதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
05-Feb-2025