உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

பெருந்துறை:ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு டி.பி.சி., (டெங்கு ஒழிப்பு) தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் பெருந்துறையில் நேற்று நடந்தது. மாநில துணை செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, மாநில பொது செயலாளர் சதீஷ் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், 100 சதவீதம் தொழிலாளர்களை, உள்ளாட்சி அமைப்புகள் பணியில் அமர்த்த வேண்டும். டி.பி.சி., பணியாளர்களுக்கு அரசாணைப்படி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம், 26 ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை