உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் சேலம், நாமக்கல் பஸ்களால் சிரமம்

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் சேலம், நாமக்கல் பஸ்களால் சிரமம்

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், நாமக்கல் செல்லும் பஸ்கள் மூலப்பட்டறை, திருநகர் காலனி, கருங்கல்பாளையம், காவிரி சாலை வழியாக சென்றன.இதனால் இப்பகுதி பயணிகள், அந்தந்த ஸ்டாப்களில் ஏறி சென்றனர். சில நாட்களாக சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில் வீதி, புது மஜித் வீதி, காவிரி சாலை, கருங்கல்பாளையம் வழியாக பஸ்கள் செல்கின்றன. இதனால் மூலப்பட்டறை, திருநகர் காலனி ஸ்டாப்களில் ஏற வேண்டிய பயணிகள், பஸ் ஸ்டாண்ட் அல்லது கருங்கல்பாளையம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, வழக்கமான வழித்தடத்தில் பஸ்களை இயக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை