உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மி.வா., பேரவை கூட்டம்

மி.வா., பேரவை கூட்டம்

ஈரோடு : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், ஈரோடு கிளையின் ஏழாவது ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது. தமிழக மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வுகால சமூக பாதுகாப்பான பென்ஷனை அரசு வழங்க வேண்டும். மின்வாரியத்தில் சொந்த பணி விடுப்பு ஆறு மாதத்துக்கான அரை ஊதிய சலுகை வழங்க வேண்டும்.வருங்கால வைப்பு நிதி தொகையில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் மருத்துவ உதவித் தொகையை கால தாமதமின்றி மின்வாரியம் வழங்க வேண்டும். என்.எம்.ஆர்., டி.சி.எல்., பணிக்காலத்தை கணக்கீடு செய்து முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வில், புதிய தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளர் குழந்தைசாமி, பொருளாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை