உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குப்பைக்கு நடுவே சின்ன மார்க்கெட் ஈரோடு அகில்மேடு வீதியில் அவலம்

குப்பைக்கு நடுவே சின்ன மார்க்கெட் ஈரோடு அகில்மேடு வீதியில் அவலம்

ஈரோடு: ஈரோடு அகில்மேடு வீதியில், மாநகராட்சி சார்பில், காய்கறி மார்க்கெட் மற்றும் பூக்கள் ஏலம் விடும் மையம் அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த மற்றும் சில்லறை கடைகள், தேங்காய் மண்டி, வாழை இலைக்கடைகள், பூக்கடைகள் அமைந்துள்ளன. நாள்தோறும் இரண்டு டன் காய்கறிகள் விற்பனையாகிறது. அதிகப்படியான வாழை இலை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால், நாள் ஒன்றுக்கு இரண்டு லோடு காய்கறி மற்றும் குப்பை கழிவு உருவாகிறது. குப்பையை கொட்ட, மாநகராட்சி சார்பில், கான்கிரீட் அல்லது தகர குப்பை தொட்டி ஏதும் வைக்கப்படவில்லை. குப்பை வண்டிகள் வந்து எடுத்துச்செல்ல ஏதுவாக, மார்க்கெட் நுழைவு வாயில் அருகில் குப்பையை கொட்டி வருகின்றனர். மார்க்கெட் அமைந்துள்ள இடம், ரோட்டை விட பள்ளமான பகுதி என்பதால், மழைக் காலத்தில், ரோட்டில் ஓடிவரும் மழை நீர், சந்தைக்குள் தேங்கி, குப்பை கழிவு கடும் துர்நாற்றம் அடிக்கிறது. மாநகராட்சியும் குப்பையை தினமும் அகற்றாமல், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், சனி, ஞாயிறு பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் முற்றிலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால், ஐந்து லோடு வரை குப்பை தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை தினந்தோறும் அகற்றி, சின்ன மார்க்கெட்டை தூய்மையாக வைக்க குப்பை தொட்டியும் வைக்கவேண்டும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை