ஈரோடு : ஈரோட்டுக்கான ரிங் ரோடு பணிகளை விரைவுபடுத்த கோரி, பொதுமக்கள்
மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்பில், கலெக்டர்
காமராஜிடம் மனு கொடுத்தனர். ஆணைக்கல்பாளையம், தாமரை நகர், எல்.ஐ.ஸி.,
நகர்ப்பகுதி மக்கள், தங்கராஜ் என்பவர் தலைமையில் வழங்கிய மனு: ஈரோட்டில்
அமைந்து வரும் ரிங் ரோடு, வளர்ந்து வரும் நகரத்துக்கும், மக்களுக்கும்,
வாகன ஓட்டிகளுக்கும், தொலை தூரம் செல்பவர்களுக்கும் மிகச்சிறந்த திட்டம்.
தற்போது சர்வே செய்து ரிங்ரோடு அமைந்து வரும் பகுதி, பொதுமக்களுக்கு எவ்வித
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பரிசல்துறை முதல் பூந்துறை மெயின்ரோடு வரை
மொத்தம் ஏழு ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து
நிலங்களும் அரசு புறம்போக்கு நிலங்கள்.குடியிருப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் என எதற்கும், எந்த பாதிப்பும்
இல்லை. சிலர் பண ஆதாயத்துக்காக 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக
நிறுவனங்கள், போர்வெல், அங்கன்வாடிகள் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர்.
பொய்யாக மனுக்கள் கொடுத்தும், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை
நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் எவ்வித
பிரச்னையும் இல்லை. எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் ரிங் ரோடு பிரச்னையை
எவ்வித பாரபட்சமும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு
முடிக்கப்படாததால், போக்குவரத்து சிரமங்கள் ஏற்படுகிறது, என மனுவில்
குறிப்பிட்டுள்ளனர்.வாடகை கட்டிடம் கிடைக்காமல் தவிக்கும் டி.எஸ்.பி., அலுவலகம்ஈரோடு: ஈரோடு டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு, வாடகை கட்டிடம் தேடும்
பணியில் போலீஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு
சொந்தக் கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு எஸ்.பி.,
அலுவலகத்தின் பின் பகுதியில் இயங்கி வந்த ஆயுதப்படை பிரிவு சமீபத்தில்
இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்துக்கு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு
இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவும்
குடிபெயர்ந்தது. ஏற்கனவே, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இயங்கிய அறையில்,
தடய அறிவியல் ஆய்வகம், போக்குவரத்து பிரிவு, ஃபோட்டோ பிரிவு ஆகியவை
மாற்றப்பட்டுள்ளன. எஸ்.பி., அலுவலக வரவேற்பு அறையின் வலது புறம், டவுன்
டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை மூலப்பாளையம் பகுதிக்கு
இடமாற்றம் செய்ய முடிவானது. இதற்கான கட்டிடம் தேர்வு செய்யும் பணி பத்து
நாட்களுக்கு மேலாக நடக்கிறது. மாதம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய்
வாடகைக்கு, கட்டிடம் கிடைக்குமா என, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருந்தபோதிலும் போலீஸ் துறை என்பதால், வாடகைக்கு கட்டிடம் தர அதன்
உரிமையாளர்கள் தயங்குகின்றனர்.