உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, சின்னாறு அணை மீன் பிடி ஏலம் நடக்க உள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:சூளகிரி சின்னாறு அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணையை அடுத்த, 5 ஆண்டுக்கு மீன் பிடி ஏலம் விடுவதற்கான அறிவிப்பை, சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கடந்த, 23ம் தேதி வெளியிட்டார். ஏலம் தொடர்பான அறிவிப்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை, http://www.tntenders.gov.inஎன்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இணையவழி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஒப்பந்தப்புள்ளி உள்ளிட்ட அனைத்து படிவங்களையும், இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இணையவழி மூலமாக வரும், 6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது, கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை